தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்துமன்னரசு செய்ய மனமகிழ்ந்து-மின்னொளிசேர்வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்தசெங்கமலங் கூம்பத் திசையிருண்டு-கங்குல்வரச்சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்தரனெனப்பொங்குங் குமுதம் பொதியவிழிப்பப்- பொங்கருறுபூவின் மூசநிறை யும்புனலில் வாழ்கயல்கண்மேவியவளர் பூக மிடறுடைப்பத் -தாவும்வெங்கதிர் - சூரியன்.கூம்ப - சுருங்க, சூரியனைக் கண்டு அலர்ந்த தாமரை திசை இருண்டு இரவு வரச் சுருங்கலாயிற்று, கங்குல் இரவு. சங்குக் கூட்டங்கள் ஈன்ற முத்தின் ஒளியை நிலவொளியென்று குமுதம் அலர்ந்தது.பொங்கர் - சோலை.பூவில் அளிமூச - பூவில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, புனலில் வாழ் கயல்கள் - நீரில் வாழும் கயல் மீன்கள். பூகமிடறு உடைப்பத் தாவும் - கமுகின் கழுத்தைக் கீறப்பாயும். கயல் மீன் குதித்துக் கழுகின் கழுத்திலுள்ள மடலைக் கீறப் பாளை விரியும்.முத்தராச கவிராசர் இயற்றிய கைலாயமாலையில் நல்லூரின் வளம் மெற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.