காரைநகர் வியாவில் கணபதிஸ்வரக் குருக்கள் நூல் நிலைய முன்றலில் அமைந்த நந்தவனத்தில் தென்னிந்திய கலைஞர் புருதோஸ்மன் கைவண்ணத்தில் சரஸ்வதி சிலை உருவாகியுள்ளது.
இச்சரஸ்வதி உருவச் சிலையை தேனூர் களஞ்சிய உரிமையாளர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
மேலும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் சிலைக்கு வர்ணம் தீட்டியவருக்கு பரிசுப்பொதி வழங்கி கௌரவித்தார்.