கபடியில் இரண்டாவது தடவையும் சம்பியனானார் ஹென்றியரசர்

2012-06-28 15:53:13


  Share
 
 
 

கடந்தாண்டு மாகாண மட்டத்தில் சம்பியன் பட்டத்தை பெற்றதைத் தொடர்ந்து இந்தாண்டும் தமது வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற துடிப்புடன் விளையாடிய இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி இந்தாண்டும் சம்பியனாகியுள்ளது.

வட மாகாண கல்வித்திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையே நடைபெற்ற 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மாகாணச் சம்பியனாக இரண்டாம் தடவையும் தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப் போட்டியில் ஏற்கனவே இரண்டு தடவைகள் மாகாண மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி வேலா யுதம் மகா வித்தியாலயத்துடன் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை மோதிக்கொண்டது. 

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரர்கள் தமது அனுபவத்தை உரிய முறையில் பயன்படுத்தி முதல் பாதி ஆட்டத்தில் மிகவும் கவனத்துடன் விளையாடி புள்ளிகளைப் பெற்றுக்கொண்டு 11:05 என்ற புள்ளிகள் என்ற நிலையில் முன்பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி துடிப்புடன் விளையாட அதற்கு ஈடுகொடுக் கும் வகையில் வேலாயும் மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டது. இறுதியில் ஹென்றியரசர் கல்லூரி 12:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னணியில் இருந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 23:11 புள்ளிகள் என்ற அடிப்படையில் வடமராட்சி வேலாயுதம் மகா வித்தியாலயத்தை வெற்றி கொண்டு மாகாணச் சம்பியனாகியது.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video