ஜெய்ப்பூர் நிறுவன வெள்ளி விழாவில் மாற்று வலுவுடையோர் சிலை

2012-07-10 14:29:02


  Share
 
 
 

யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் 25 ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு மாற்று வலுவுடையோர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் 25 ஆவது வெள்ளி விழா மலரும் வெளியிடப்பட்டது.

வெள்ளி விழா மலரினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து மாற்றுவலுவுடையோருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

நடைபெற்ற ஆண், பெண் இருபாலருக்குமான விளையாட்டுக்களாக சைக்கிள் ஓட்டம், மெதுவான சைக்கிள் ஓட்டம், சங்கீதக்கதிரை, கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுக்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாற்றுவலுவுடையோருக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜெ.கணேசமூர்த்தி, செயலாளர் டாக்டர் தெய்வேந்திரம் ஆகியோருக்கு ICRC நிறுவனப் பணிப்பாளர் கிறிஸ்தோப்பர் நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து மாற்றுத்திறன் பயனாளி ஒருவரும் ஜெய்ப்பூர் நிறுவனத் தலைவர், செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். டர்ந்து பாடசாலை மாணவர்களின் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகவும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் மாவட்ட சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ், யாழ்.மாவட்டத் திட்டப் பணிப்பாளர் மோகனதாஸ் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video