அரிவாட்டாய நாயனார் புராணம் பற்றிய கருத்தரங்கும் கலந்துரையாடலும்

2012-07-26 16:27:29


  Share
 
 
 

பெரிய புராணத்தில் அரிவாட்டாய நாயனார் புராணம் பற்றிய கருத்தரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 01.08.2012 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சைவவித்தியாவிருத்திச் சங்கத் தலைவர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கடவுள் வாழ்த்தினை சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் இசைப்பார்.

வரவேற்புரையை சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் கு.பாலஷண்முகனும் தொடக்கவுரையை யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ{ம் வழங்குவர்.

நிகழ்வில் அரிவாட்டாய நாயனார் புராணக் கட்டமைப்பு என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரனும், அமுது செய்விக்க மூளும் அன்பு என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

கருத்தரங்கைத் தொடர்ந்து கருத்தாடல் இடம்பெறும். இதன் இணைப்பாளர்களாக சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் ஆகியோர் செயற்படுவர்.

அண்ணலார் அறுத்த கூலி என்ற பொருளில் ஆடல் அளிக்கை இடம்பெறும் இதனை சுதுமலை புகழ் கல்வி நிறுவன மாணவர்கள் வழங்கவுள்ளனர்.

சமய இலக்கியங்கள் மீது இளையோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் ஆய்வு நோக்கில் இலக்கியங்களை அணுகும் திறனை வளர்த்தெடுக்கும் வகையிலும் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்வமுள்ள எவரும் இதில் கலந்து பயன்பெறலாம் எனவும் நிகழ்வின் அமைப்பாளர்களான பேராசிரியர் அ.சண்முகதாஸும் விரிவுரையாளர் ச.லலீசனும் தெரிவித்துள்ளனர்.

 

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video