கோப்பாயில் இயங்கிய சரஸ்வதி வித்தியாசாலையின் நூற்றாண்டு மலரான சரஸ்வதி வெளியீட்டு விழாவும் கோப்பாய் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் அண்மையில் நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்தில் கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கோப்பாய் சரஸ்வதி வித்தியாசாலையின் நிறுவுநர் மு.சுவாமிநாதன் நினைவு மன்றத்தாரால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழாவில் வெளியிடப்பட்ட நூலை நிறுவுநரின் குடும்பத்தைச் சார்ந்த கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் தொகுப்பாக்கம் செய்திருந்தார்.
நூலின் வெளியீட்டுலையை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி ஆசிரியர் ச.மார்க்கண்டுவும் நயப்புரையை கலாநிதி ஆறு.திருமுருகனும் வழங்கினர். இணையத்தளம் குறித்த அறிமுகவுரையை கலாநிதி கு.திருக்குமரன் ஆற்றினார்.
நீர்வேலி இணையத்தளத்தின் செயற்பாடுகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் அதனைப் பார்வையிடுவோரின் ஆவல் குறித்து கலாநிதி ஆறு.திருமுருகன், கலாநிதி கு.திருக்குமரன் விதந்துரைத்தனர்;.
முன்னதாக இவ்விழா கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுவதாக ஏற்பாடாகியிருந்த போதிலும் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தடங்கல்களால் இவ்விழா உடனடியாக நீர்வேலிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் இணையத்தளத்தை www.kopyvillage.info என்ற முகவரியில் பார்வையிடலாம்